கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா.. எப்போன்னு தெரியுமா?..

0
163

Captain Miller: தனுஷ் நடிப்பில் திரைக்குவரவுள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள தேதி வெளியாகியுள்ளது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கைன், அதிதி பாலன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மேலும், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் 2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

தற்போது இசை வெளியீட்டு விழாவின் தேதி 2024 ஜனவரி 3ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், இத்தகவலை அறிந்த தனுஷ் ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள தயாராகி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here