‘கேப்டன் மில்லர்’ படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.. – பிரியங்கா மோகன் இன்ஸ்டாவில் பதிவு..

0
127

Priyanka Mohan: இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சிவராஜ் நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கைன், அதிதி பாலன், நிவேதிதா சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மேலும், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படன் இன்று (ஜன.12) ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன், ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவர் அந்த பதிவில், “இறுதியாக கேப்டன் மில்லர் படத்தை நீங்கள் அனைவரும் காணும் நாள் வந்துவிட்டது. இதுபோன்ற ஒரு அற்புதமான படைப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நாங்கள் உருவாக்கிய இனிமையான நினைவுகளுக்கும் நான் கற்றுக்கொண்ட அனைத்து பாடங்களுக்கும் இந்த படம் உண்மையிலேயே சிறப்பானதாக இருக்கும்.

நீங்கள் ஒவ்வொருவரும் திரையரங்குகளில் திரைப்படத்தை ரசிப்பீர்கள், அதில் ஒரு பகுதியாக இருப்பதை நான் விரும்பிய அளவுக்கு ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here