‘கேம் சேஞ்சர்’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?.. அப்டேட் கொடுத்த தில் ராஜு..!

0
68

Game Changer: இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஷங்கர், நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ஜாபிலம்மா’ என்ற பாடல் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியானது, ஆனால் அதற்குள் அந்த பாடல் சமூக வலைத்தளங்களில் லீக்கானது. இதனால் ஷாக் ஆன படக்குழு, பாடல் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது.

இந்நிலையில், ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை தயாரிப்பாளர் தில் ராஜு பகிர்ந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட தில் ராஜு, ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here