சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்!.. என்ன சொன்னார் தெரியுமா?..

0
96

நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து இசையமைப்பாளர் டி. இமான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நிலையில் இதற்குப் பதில் அளிக்கும் விதமாக ‘அயலான்’ இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது அவரது நடிப்பில் ‘அயலான்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா நேற்று (டிச.26) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் என்ன பேசப்போகிறார் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது. ஏனென்றால் முன்னதாக டி. இமானின், “சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டார். குழந்தைகளின் எதிர்காலம் கருதி அதை எல்லாம் வெளியே சொல்ல முடியவில்லை. ஆனால், இந்த ஜென்மத்தில் இனிமேல் அவருடன் இணைந்து பணியாற்ற மாட்டேன்” என கூறியிருந்தார்.

இந்த பேச்சு மிகப்பெரிய சர்ச்சையானது. மேலும், இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சையான கருத்துக்கள் எழுந்தன. இதற்கு மௌனம் காத்த சிவகார்த்திகேயனை பார்த்து, “ இது உண்மையா?” என மீடியாக்கள் கேட்டு வந்தன. ஆனால் இது குறித்து அவர் வாய் திறக்கவில்லை.

ஆகையால், இதற்குப் பதிலளிக்கும் விதமாக ‘அயலான்’ இசை வெளியீட்டு விழாவில் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் அவர் பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, “பொங்கலுக்கு எத்தனை படங்கள் வந்தாலும் அந்த படங்கள் அடித்து துவம்சம் பண்ணட்டும்.

என்னை சிலர் சூப்பர்ன்னு சொல்வாங்க, சில பேரு இன்ஸ்பிரேஷன் சொல்லுவாங்க. சில பேரு திட்டுவாங்க. ஆனால், நான் இதையெல்லாம் எடுத்துக்குறதே இல்லை. என் ஹேட்டர்ஸை நான் ஒன்னுமே சொல்ல விரும்பல. என்னை பிடித்தவர்களுக்காக நான் ஓடிக் கொண்டு தான் இருப்பேன்” என பொத்தாம் பொதுவாக ஒரு பதிலை கூறியிருக்கிறார்.

இந்தப் பேச்சுக்கு ஏதாவது உட்கருத்து இருக்குமோ என்ற சந்தேகத்தில் சிலர் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இருந்தபோதிலும், சிவகார்த்திகேயனின் ரசிகர்கள், அவரை திரையில் காண காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: ‘Thalaivar 171’ படத்தில் SK நடிப்பது உறுதியா?.. – அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here