‘சலார்’ படத்தின் புதிய அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்..!

0
94

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சலார்’ திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். நடிகை சுருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை கேஜிஎப் திரைப்படத்தைத் தயாரித்த அதே ஹோம்பாலே பிலிம்ஸ் இந்த ‘சலார்’ படத்தையும் தயாரித்துள்ளது. ‘சலார்’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், தற்போது ‘சலார்’ படத்தின் டப்பிங் முடிவடைந்துள்ளதாக பிரித்விராஜ் தனது ‘X’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சலார் படத்தின் இறுதிக்கட்ட டப்பிங் திருத்தங்கள் முடிந்தன. ஒரே கதாபாத்திரத்திற்கு ஒரே படத்தில் 5 மொழிகளில் டப்பிங் பேசுவது இதுவே முதல் முறை.

தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் ஒரு படத்திற்காகப் பேச வேண்டும். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வருகிற 22ஆம் தேதி தேவாவும் வரதாவும் உங்களை சந்திப்பார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சலார்’ திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனைப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 55 நிமிடம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here