‘சலார்’ மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!

0
67

Salaar Movie Making: ‘சலார்’ திரைப்படம் ரிலீஸ் ஆகிய மூன்று நாள்களில் ரூபாய் 402 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கேஜிஎப் திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கேஜிஎஃப் படத்துக்கு இசையமைத்து ரசிகர்களைப் பெற்ற ரவி பர்சூர் தான் சலார் படத்துக்கும் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்துள்ளார். நடிகை சுருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிசம்பர் 22ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்திற்கு தெலுங்கு, கன்னட ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வந்தாலும் மறுபக்கம் அதற்கு சரிசமமாக விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது ‘சலார்’ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும், சலார் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது. அதன்படி சலார் திரைப்படம் மூன்று நாள்களில் ரூ.402 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here