சிக்கன் கிரேவி சமைத்த அஜித்..! ஒரு பிடி பிடித்த விடாமுயற்சி படக்குழு..!

0
98

VidaaMuyarchi: விடாமுயற்சி படக்குழுவினருக்கு நடிகர் அஜித் சிக்கன் கிரேவி சமைத்து கொடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மங்காத்தா படத்துக்குப் பின்னர் அஜித்துடன் அர்ஜூன் மீண்டும் இணைந்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், சமீப தினங்களாக நடிகர் அஜித், படப்பிடிப்புத் தளங்களில் பணியாற்றுபவர்களை கேண்டிட் போட்டோ ஷூட் எடுத்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதாகத் தகவல்கள் வெளிவருகிறது.

அந்த வகையில் தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. நடிகர் அஜித், விடாமுயற்சி படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் படக்குழுவினர்களுக்கு அவரே சிக்கன் கிரேவி செய்து பரிமாறியுள்ளார். மேலும், இந்த கிரேவி மிகவும் அருமையாக இருந்ததாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது அஜித் சமைக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here