‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ‘வந்தா மல’ பாடல் ரிலீஸ்..!

0
106

Singapore Salon: நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இந்த படத்தை ‘ரவுத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் சிகை அலங்கார நிபுணராக நடித்திருக்கிறார். அவருடன் இந்த படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், விவேக் மெர்வின் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது. அதன்படி ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் முதல் பாடலான ‘வந்தா மல’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

‘சிங்கப்பூர் சலூன்’ படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு சம்மரில் இந்த படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்த நிலையில் தற்போது ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: Vettaiyan Poster Making: ‘வேட்டையன்’ பட போஸ்டர் உருவாகும் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here