உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பல்வேறு தரப்பினருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அங்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், அயோத்தியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. அந்த வகையில் சர்வதேச தரத்துடன் விமான நிலையமும் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து அயோத்திக்கு அடுத்த வாரம் முதல் விமான சேவை தொடங்கப்படும் என சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து அயோத்திக்கும், லட்சத்தீவின் அகாட்டி தீவுக்கும் அடுத்த வாரம் முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. விமான சேவை தொடங்கப்படும் தேதியும், முன்பதிவு குறித்த தகவல் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராமர் கோயில் திறப்பு விழா.. பக்தர்களுக்கு இலவச படகு சவாரி..