செல்வராகவன் இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் டிராப்.! என்ன காரணம்?.. மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்குமார்!

0
116

Vikram was supposed to do a film with Selvaraghavan’: செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தைத் தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ்குமார் மீண்டும் செல்வராகவன், நடிகர் விக்ரம் ஆகியோருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருந்திருக்கிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக படம் தாமதமான நிலையில் சியான் விக்ரம், செல்வராகவனுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பை இழந்ததாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கூறியுள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் ‘சிந்துபாத்’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறாராம். ஆனால், சில காரணங்களால் அந்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் தான் இசையமைக்க இருந்திருக்கிறார் என்ற சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

Image Courtesy – Twitter

இது குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கூறுகையில், “செல்வராகவன் இயக்கத்தில் ‘சிந்துபாத்’ என்ற படத்தில் விக்ரம் நடித்து வந்தார். படப்பிடிப்பும் நன்றாக சென்றுகொண்டிருந்தது. அந்த படத்திற்கு இசையமைக்க நான் கமிட்டாகி இருந்தேன். படத்திற்காக இசையும் அமைக்க தயாராகிவிட்டேன். அந்த படத்திற்காக ஒரு பாடலும் ரெடியாக இருந்தது.

Image Courtesy – Twitter

அந்த பாடம் தான் ‘நான் சொன்னதும் மழை வந்துச்சா’ என்ற பாடல். ஒரு கட்டத்தில் ‘சிந்துபாத்’ படம் துரதிர்ஷ்டவசமாக பாதியில் கைவிடப்பட்டது. இதனால், ‘நான் சொன்னதும் மழை வந்துச்சா’ என்ற பாடலை செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன’ படத்திற்கு கொடுத்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

தற்போது, ஜி.வி.பிரகாஷ்குமார், சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக இணைந்துள்ள ‘Sk 21’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 2013 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் தான் இசையமைக்க இருந்திருக்கிறார். ஆனால், ஏற்கனவே கமிட்டாகிய படங்கள் இருந்ததால் இசையமைக்க முடியவில்லை.

Image Courtesy – Twitter

ஆனால், தற்போது, ‘Sk 21’ படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் ரிலீஸுக்கு காத்திருக்கும் ‘கேப்டன் மில்லர்’, ‘தங்கலன்’, ‘Sk 21’ போன்ற பல உயர்தர திட்டங்களுக்கு இசையமைக்கவுள்ளார். தனுஷின் மூன்றாவது இயக்கமான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்திற்கும் இசையமைக்க ஜி.வி.பிரகாஷ்குமார் கமிட்டாகி உள்ளார்.

இதையும் படிங்க: தூத்துக்குடிக்கு திடீர் விசிட் அடித்த ரஜினிகாந்த்!.. எதுக்கு தெரியுமா?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here