‘ஜவான்’ சாதனையை முறியடிக்குமா ‘அனிமல்’..

0
37

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் வரலாறு காணாத அளவிற்கு வசூலில் சாதனை படைத்தது. இந்த படம் இந்தியா மட்டுமல்லாது உலகையே திரும்பி பார்க்க வைத்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான ‘அனிமல்’ திரைப்படம் ‘ஜவான்’ பட ரெக்கார்டை முறியடிக்க வாய்ப்புள்ளது என கூறப்பட்டு வருகிறது.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த படம் ஹிந்தியில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸானது.

ஜவான் திரைப்படம் வரலாறு காணாத அளவிற்கு வசூல் படைத்து இந்திய சினிமாவை உலக சினிமா திரும்பி பார்க்கும் வகையில் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வசூலை செய்தது.

இந்நிலையில், இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், அணில் கபூர், பாபி டையால், ராஷ்மிகா மந்தானா உள்ளிட்டோர் நடித்திருக்கும் அனிமல் திரைப்படம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அனிமல் திரைப்படம் ரிலீஸான ஐந்து நாட்களில் மிகப்பெரிய தொகையை வசூலித்திருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ போஸ்டரையும் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரிலீசான ஐந்து நாட்களில் அனிமல் திரைப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலாக கிட்டத்தட்ட 481 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜவான் படத்தின் வசூலை ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படம் முறியடிக்குமா? என்ற கேள்வி பாலிவுட் வட்டாரங்களில் எழுந்துள்ளது. பாலிவுட் வட்டாரங்கள் மட்டுமல்லாது சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த கேள்வி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இது குறித்து சினிமா விமர்சனர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் கூறுகையில் அனிமல் திரைப்படம் கட்டாயம் ஜவான் திரைப்படத்தின் வசூலை முறியடிக்கும் கூறி வருகின்றனர். இதற்கான பதிலை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here