தனுஷை வைத்து இயக்கும் ஹெச். வினோத்..!

0
99

‘H. Vinoth’: இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து மாபெரும் ஹிட்டான படம் ‘துணிவு’. இந்த படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனின் 233ஆவது படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர்.

ஆனால், கமல் அடுத்தடுத்து ‘இந்தியன் 2’, ‘தக் லைப்’ உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார். ஆகையால், பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு தற்போது கமலை வைத்து வினோத் இயக்கும் படம் தள்ளி வைக்கப்பட்டது.

இதனால், இயக்குநர் வினோத் கார்த்தியை வைத்து தீரன் இரண்டாம் பாகத்தை இயக்கியவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், விஜய்க்கும், வினோத் கதை சொல்லியதாகவவும் விஜய்யை வைத்து இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால், தற்போது நடிகர் தனுஷின் புதிய படத்தை வினோத் இயக்குவதற்கான பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரிக்கிறார்.

இப்போது இந்த படத்தின் கதை குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் ஜூன், ஜூலை மாதங்களில் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here