தனுஷ் புகை பிடிக்கும் காட்சி மீதான மனு தள்ளுபடி..!

0
145

நடிகர் தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் தனுஷ் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. அதில், புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீங்கு குறித்து எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை.

இதையடுத்து, இந்த படத்தை தயாரித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த புகார் மீதான விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், புகாரை ரத்து செய்யக் கோரியும் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் சென்னை நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோருக்கு எதிராக நிலுவையில் இருந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஒகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்தது.

இந்த விவகாரத்தில் சென்னை நீதிமன்றம் உத்தரவு சரியே. அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்து மேல்முறையீடு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ‘மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டியதில் உடன்பாடில்லை’ – அமைச்சர் உதயநிதி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here