தயாராகும் ‘தேசிங்கு ராஜா 2’.. நடிகர்கள் யார் யார் தெரியுமா?..

0
61

தமிழ் சினிமாவில் காதல் படங்களில் மிக முக்கியமானவைகள் ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘பெண்ணின் மனதை தொட்டு’, ‘தீபாவளி’ போன்ற மென்மையான காதல் படங்களை இயக்கியவர் இயக்குநர் எழில்.

இவர் 2012ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு காதல் படங்களையும் இயக்காமல் காமெடி படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அந்த வகையில், இவர் இயக்கத்தில் வெளியான ‘மனம் கொத்தி பறவை’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘தேசிங்கு ராஜா’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஹிட்டானது.

இந்நிலையில், சரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தேசிங்கு ராஜா’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர் விமல், இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ஹிட்டான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

வழக்கம்போல் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா போன்ற பல காமெடி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைக்கிறார்.

‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்திற்கு பிறகு இயக்குநர் எழிலுடன் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்தில் இணைகிறார். கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்களின் கதையை மையமாக வைத்து காமெடி கலந்து படம் உருவாகுவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தை வருகிற கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ‘கேப்டன் மில்லர்’ வெற்றி.. தனுஷுக்கு மாலை அணிவித்து வாழ்த்திய தயாரிப்பாளர்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here