‘தலைவர் 170’ டைட்டில் என்ன தெரியுமா?.. தயாரிப்பு நிறுவனம் கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்..!

0
92

Thalaivar 170: ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை தலைவர் 170 படத்தின் தலைப்பு வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

உலக அளவில் ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் த.செ.ஞானவேல். இவரது இயக்கத்தில் ரஜினிகாந்த் 170ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குத் தற்காலிகமாக ‘தலைவர் 170’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாஸ் வெற்றியடைந்த நிலையில், அதன் வசூல் எக்கச்சக்கமாக எகிறியது. சமீபத்தில் ரஜினி காந்த்துடன் பான் இந்தியா நடிகர்கள் நடித்திருந்த ‘ஜெயிலர்’ படம் உலக அளவில் வெற்றியடைந்து நல்ல வசூலைப் பெற்றது.

இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள ‘தலைவர் 170 படம்’ ரசிகர்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. குறிப்பாக ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல் தலைவர் 170 படத்தை எழுதி இயக்குவதால் இப்படத்தின் கதை எப்படிப்பட்டதாக இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், நடிகைகள் மஞ்சு வாரியர், சார்பட்டா பரம்பரை பட நடிகை துஷாரா விஜயன் மற்றும் நடிகை ரித்திகா சிங் நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தொடர்ந்து சில நாட்களாகப் படக்குழுவினர் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ரஜினியின் பிறந்த நாளான இன்று ‘தலைவர் 170’ படத்தின் தலைப்புடன் கூடிய டீசர் வீடியோ வெளியாகவுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here