‘தலைவர் 170’ டைட்டில் வெளியானது?.. மாஸ் லுக்கில் ரஜினி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

0
109

‘Thalaivar 170’: ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு தலைவர் 170 படத்தின் தலைப்பு வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ள நிலையில் சற்று தாமதமாக தற்போது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 170ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குத் தற்காலிகமாக ‘தலைவர் 170’ எனப் பெயர் வைக்கப்பட்டது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும், லைகா நிறுவனம் தொடர்ந்து சில நாட்களாகப் படக்குழுவினர் குறித்த அப்டேட்டுகளை கொடுத்து வந்தது. அதன்படி ரஜினியின் பிறந்த நாளான இன்று ‘தலைவர் 170’ படத்தின் தலைப்புடன் கூடிய டீசர் வீடியோ வெளியாகவுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில், தற்போது ‘தலைவர் 170’ படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘வேட்டையன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை லைகா நிறுவனம் தனது ‘X’ பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று மாலை 5 மணிக்கு படத்தின் பெயர் வெளியாகும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை.

இதனால், ரசிகர்கள் கோபமடைந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் சரியாக 5:30 மணியளவில் தலைவர் 170 படத்தின் பெயரும் அதற்கான டீசரும் வெளியானது. தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் விதமாக வெளியிடப்பட்ட இந்த டைட்டிலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here