தலைவா ப்ளீஸ் வெளியே வா..! கண்ணீருடன் ரஜினி ரசிகர்கள் காத்திருந்த அவலம்!

0
84

ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரைக் காண்பதற்காக அவரது ரசிகர்கள் வீட்டின் முன்பு கூடிய நிலையில் ரஜினி வீட்டில் இல்லை என கூறியதால் கடுப்பான ரசிகர்கள் ரஜினியைத் திட்டி தீர்த்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73ஆவது பிறந்த நாளை இன்று (டிச.12) கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக் கூறியும் வருகின்றனர்.

பலரும் ரஜினிகாந்த்தின் வீட்டிற்குச் சென்று அவரைக் காண காத்திருந்தனர். வெகு நேரமாகக் காத்திருந்தும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரஜினிகாந்த் வீட்டைவிட்டு வெளியே வரவே இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், வீட்டின் வெளியே நின்றிருந்த ரசிகர்கள் கண்ணீர் மழ்க, ‘தலைவா வெளியே வா.. உன் முகத்த பார்க்கவேண்டும்.. வா ராசா.. வாப்பா’ எனக் கதறினர்.

இருந்தபோதிலும் ரஜினி வெளியே வரவில்லை. ஆண்டுதோறும் புத்தாண்டு பண்டிகை, அவரது பிறந்த நாள் போன்ற தினங்களில் தனது ரசிகர்களைச் சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இன்றும் தங்களைக் காண ரஜினி வருவார் என அவரது ரசிகர்கள் வீட்டின் வெளியே காத்திருந்தும் எந்த பயனும் இல்லை.

இது குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது ரஜினி வீட்டில் இல்லை எனக் கூறியிருக்கின்றனர். இதனால், ஆத்திரமடைந்த ரசிகர்கள், ரஜினியைத் திட்டித் தீர்த்தனர். “பூங்கொத்து கொடுக்கச் சென்ற பிரபலங்களை மட்டும் ரஜினி பார்ப்பதாகவும் இது குறித்துக் கேட்டால் ரஜினி வாங்கவில்லை அவரது பிஏ தான் வாங்கியதாகக் கூறுகின்றனர்.

என்னாங்க கதவிடுறிங்க.. முன்னாடியே ரஜினி இல்லை எனக் கூறியிருந்தால் நாங்கள் இவ்வளவு நேரம் பட்டினியாகக் காத்திருக்க மாட்டோம். ரஜினி இல்லை என கூறுகிறீர்கள் பிறகு எதற்கு இவ்வளவு மீடியா? இவ்வளவு கேமராக்கள் இருக்கு?” என சரமாரியாக கேள்வி எழுப்பினர். தொடர்ந்து ரஜினியை எதிர்பார்த்து ரசிகர்கள் அங்குக் கூடியிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here