‘Thalapathy 68’ : இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 68ஆவது படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் ஹைதராபாத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது பிரேக் விடப்பட்டுள்ள நிலையில், ஜனவரி முதல் வாரம் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம் என நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறார்கள். இந்த நிலையில், ‘தளபதி 68’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் கிச்சா சுதீப் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வருகிற புத்தாண்டு அன்று வெளியிடுவதாகப் படக்குழு கூறியிருந்தது. இதனிடையே, ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் ‘Boss’ அல்லது ‘Puzzle’ என சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் தற்போது படத்திற்கு ‘G.O.A.T’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் அறிவிக்கப்படும் என படக்குழு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு தனது ‘X’ தளத்தில் படத்தின் அப்டேட் கம்மிங் சூன் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: YouTube Trending No.1-ல் ‘லவ்வர்’ படத்தின் டீசர்..!