இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 68ஆவது படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் ஹைதராபாத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வருகிற புத்தாண்டு அன்று வெளியிடுவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது படத்தில் கஞ்சா கருப்பு இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம் என நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறார்கள்.