திடீரென ‘அன்னபூரணி’ படத்தை நீக்கிய நெட்பிளிக்ஸ்.. என்ன காரணம்?..

0
104

நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘அன்னபூரணி’. இவருக்கு ஜோடியாக ஜெய் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

அதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 29ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ‘அன்னபூரணி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது.

இந்தப் படம் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டிருப்பதாக கூறி படக்குழுவினரின் மீது மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்திலிருந்து அன்னபூரணி படத்தை நீக்க வேண்டும் என மும்பையில் உள்ள நெட்பிளிக்ஸ் அலுவலகத்திற்கு முன்பு விஷ்வ இந்து பரிஷர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இருந்து ‘அன்னபூரணி’ திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இடம்பெற்றது தொடர்பாக படத்தை இணைந்து தயாரித்த ஜீ ஸ்டூடியோஸ் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த விவகாரம் தொடர்பாக எங்கள் இணை தயாரிப்பாளர்களான டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கும் வரையில் அன்னபூரணி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இடம்பெறாது’ என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மிரட்டலான ‘கேப்டன் மில்லர்’ மேக்கிங் வீடியோ.. ரசிகர்கள் உற்சாகம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here