‘திடீரென நிறுத்தப்பட்ட விடாமுயற்சி ஷூட்டிங்’!.. என்ன காரணம்?..

0
83

‘VidaaMuyarchi Update’: அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் இன்றுடன் முடித்துக்கொண்டு படக்குழு சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜர்பைஜான் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படம் விருவிருப்பாக உருவாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இயக்குநர் மகிழ் திருமேனிக்கு அஜித் சில கண்டிஷன்கள் போட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மங்காத்தா படத்துக்கு பின்னர் அஜித்துடன் அர்ஜுன் மீண்டும் இணைந்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தற்போது குளிர்காலம் என்பதால் படக்குழுவினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக படப்பிடிப்பை பகல் நேரத்திலேயே எடுத்து வந்தனர்.

இந்த நிலையில், தற்போது படப்பிடிப்பை நிறுத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலைவனத்தில் படப்பிடிப்பு காட்சி எடுத்திருந்தபோது புயல் வீசியதாக கூறப்படுகிறது. முன்னதாக பனி அதிகமாக இருப்பதாக படக்குழு அவதிபட்டு வந்த நிலையில் தற்போது புயலும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பை இன்றுடன் (டிச.27) முடித்துக்கொண்டு நாளை சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் மீண்டும் சென்னை திரும்புவாரா அல்லது துபாயில் உள்ள தனது வீட்டிற்கு செல்வாரா என தெரியவில்லை.

ஆனால், படக்குழு சென்னை திரும்பவுள்ளதாகவும், மீண்டும் ஜனவரி 6ஆம் தேதி அஜர்பைஜான் சென்று படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக இந்த படப்பிடிப்புகள் 70 நாள்கள் தொடரும் எனவும் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்துடன் பேக்கப் செய்யப்பட்டு மீண்டும் சென்னையில் படப்பிடிப்புகள் தொடரவுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுளது.

இதையும் படிங்க: G.O.A.T டைட்டிலை மாற்ற படக்குழு திட்டம்..! டைட்டில் லீக் ஆனது தான் இதற்கு காரணமா?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here