ரஜினிகாந்த் நடித்த ‘தில்லு முல்லு’ படத்தில் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த மாஸ்டர் சந்திரசேகரன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் 1981ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தில்லு முல்லு’. கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்த காமெடி திரைப்படம். இந்த ‘தில்லு முல்லு’ படத்தில் நடித்திருந்தவர் மாஸ்டர் சந்திரசேகரன்.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து ஏமாற்றுவதைக் கண்டுபித்து அதனை ரஜினியிடம் கூறி மிரட்டிப் பணம் வாங்கும் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
59 வயதான இவர், சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இவர், ரஜினிகாந்தை மீண்டும் ஒருமுறையாவது நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆசையுடன் இருந்திருக்கிறார். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருந்திருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவரது மகன் கார்த்திக் கூறியுள்ளார். மேலும், அவரது ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என வேதனை தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: அஜித் – வெற்றிமாறன் கூட்டணி கன்ஃபார்ம்! அப்போ வாடிவாசல் சூட்டிங் என்னாச்சு?