தூத்துக்குடிக்கு திடீர் விசிட் அடித்த ரஜினிகாந்த்!.. எதுக்கு தெரியுமா?..

0
128

‘Rajinikanth in Thoothukudi’: இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ரஜினி திடீரென தூத்துக்குடி சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் ஃபகத் பாசில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

ரஜினியின் பிறந்தநாளான டிச.12ஆம் தேதி ‘வேட்டையன்’ படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினி இன்று (டிச.26) தூத்துக்குடி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்புகள் தூத்துக்குடியில் நடைபெறுவதால் ரஜினி அங்கு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ‘Best Villain of 2023’: வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை மயக்கிய நடிகர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here