தொழிலதிபர் பட்டியலில் இடம்பிடித்த நயன்தாரா!

0
180

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான நயன்தாரா, இந்த ஆண்டின் businesstoday பத்திரிக்கையில் வெளியாகும் ‘the most powerful women in business’ என்ற பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.

நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து பல பிசினஸ்களை செய்து வருகிறார். நயன்தாரா தற்போது லிப் பாம் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். மேலும், சென்னையை தளமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் சாய் வேலில் முதலீடு செய்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாராவின் 20 ஆண்டுகால திரையுலகப் பயணத்தில் அவருக்கு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் கிடைத்தது. தற்போது கூட அந்த பட்டம் குறித்த சர்ச்சையான விவாதங்கள் வெளிவந்தன.

தன்னை யாரும் சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். என்னதான் அவர் இவ்வாறு கூறியிருந்தாலும், நயன் தாராவின் ரசிகர்கள் அவரை அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைத்து வருகின்றனர். இவ்வாறு, சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா தற்போது தொழிலதிபராக மாறியிருக்கிறார்.

இவர் தற்போது, தோல் பராமரிப்பு பிராண்டான 9Skin, சானிட்டரி நாப்கின்கள் பிராண்ட் Femi9 மற்றும் சூப்பர் ஃபுட்ஸ் பிராண்டான ‘தி டிவைன் ஃபுட்ஸ்’ ஆகியவற்றில் முதலீடு செய்து தனது தொழிலை சிறப்பாக ஆரம்பித்துள்ளார். தற்போது கூட சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தனது பிராண்டான சானிட்டரி நாப்கின்களை வழங்கினார்.

இதனைப் பார்த்த சிலர், நயன்தாரா தனது பிராண்டை விளம்பரப்படுத்துவதற்காக இவ்வாறு செய்து வருவதாக விமர்சனங்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் இது குறித்து நயன்தாரா businesstoday பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், “ஆம், நாங்கள் தொழில் செய்து அதில் இருந்து பணம் சம்பாதிக்கிறோம், ஆனால் அது மக்களுக்கு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும், “நானும் விக்னேஷும் மிகவும் கைகோர்த்து இருக்கிறோம். நாங்கள் எதையாவது அங்கீகரிக்காவிட்டால், அந்த பொருள்கள் எங்களது அனுமதியின்றி வெளியேறாது.

எனது 75ஆவது படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, அழகு மற்றும் தனிப்பட்ட கவனிப்புக்குண்டான பொருள்கள் மட்டுமின்றி இன்னும் பல முயற்சிகள் தயாராக இருக்கிறது. அவற்றையில் சந்தைப்படுத்தவுள்ளோம்” என கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here