த்ரிஷாவுக்கு எதிராக மான நஷ்ட வழக்கு.. மன்சூர் அலிகான் மீது காண்டான நீதிபதி..

0
131

நடிகை த்ரிஷாவுக்கு எதிராக, மன்சூர் அலிகான் தாக்கல் செய்திருந்த மான நஷ்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது, மன்சூர் அலிகானுக்கு எதிராக த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருக்க வேண்டும் நீதிபதி காட்டம் தெரிவித்துள்ளார்.

சென்னை: கடந்த மாதம் பத்திரிகையாளர் சந்திப்பில், லியோ படம் தொடர்பாக, த்ரிஷாகுறித்த ஆபாச கருத்துக்களை மன்சூர் அலிகான் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.

மேலும் த்ரிஷாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் வலியுறுத்தின. இருப்பினும், மன்னிப்பு கேட்க மறுத்த மன்சூர் அலிகான், கடைசியாக பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்த விவகாரத்தில் தன்னுடைய பேட்டி தொடர்பான முழு காணொளியையும் பார்க்காமல், தன் பெயருக்கு களங்கம் விளைவித்து விட்டதாக, நடிகை த்ரிஷா, குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ரூ.1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மன்சூர் அலிகான் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, “இந்த விவகாரத்தில் த்ரிஷா தான் வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும். எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்க வேண்டாம்” என நீதிபதி காட்டமாகத் தெரிவித்தார்.

நடிகராக இருக்கும் நபரை பல்வேறு இளைஞர்கள் பின் தொடரும் நிலையில், பொதுவெளியில் எவ்வாறு பேச வேண்டும் என மன்சூர் அலிகானுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். எந்த தப்பும் செய்யவில்லை என தற்போது கூறும் மன்சூர் அலிகான், கைது நடவடிக்கைகளிலிருந்து தப்பாதற்காகத் தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டாரா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அவரது தரப்பு வழக்கறிஞர், மன்சூர் பேசிய முழு காணொளியையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகத் தெரிவித்தார். மேலும் மன்சூரை பற்றி த்ரிஷா பதிவிட்டுள்ள ட்விட்டை நீக்க உத்தரவிடும்படியும் வாதிட்டார்.

இந்நிலையில், மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டவுடன் பிரச்சினை தீர்ந்து விட்டதாகத் தெரிவித்த த்ரிஷா வழக்கறிஞர், மன்சூர் அலிகான் எதற்காக இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறார் எனத் தெரியவில்லை எனக் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மன்சூர் அலிகான் வழக்கு குறித்து, த்ரிஷா, குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here