நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம்.. பிரதமர் மோடி பங்கேற்பு..

0
81

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. இவர், கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் அஜித்தின் ‘தீனா’, விக்ரமின் ‘ஐ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமாகவும் இருக்கிறார். இந்த நிலையில் இன்று (ஜன.17) இவரது மகள் பாக்யாவிற்கும், ஸ்ரேயாஸ் மோகன் என்பவருக்கும் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் திருமணம் நடந்தது.

இந்த நிலையில், சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மேலும், அவர் முன்னின்று இந்த திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

இந்த திருமணத்தில் மலையாள சினிமா நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதையும் படிங்க: வெளியானது ‘தூக்குதுரை’ படத்தின் டிரைலர்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here