நடிகர் மதுரை மோகன் காலமானார்.. நடிகர்கள் அஞ்சலி!

0
110

Madurai Mohan : ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மதுரை மோகன் காலமானார்.

தமிழ் திரைத்துறையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் மதுரை மோகன். இவர் உடல்நலக் குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருந்த மோகன் பல்வேறு படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்திருக்கிறார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்தார்.

இவர் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், முண்டாசுப்பட்டி படத்தில் மோகனுடன் நடித்து நட்பான நடிகர் காளி வெங்கட், மோகன் இறப்பு குறித்து தனது ‘X’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாகத் தமிழ் திரைத்துறையில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை ‘முண்டாசுப்பட்டி’ படத்தின்மூலம் வாய்ப்பளித்தவர் இயக்குநர் ராம்குமார்” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அவருடன் நடித்த நடிகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here