‘நான் பூர்ணாவுக்கு குழந்தையாகப் பிறக்க விரும்புகிறேன்’ – மிஷ்கின் பேச்சு..!

0
126

‘சவரக்கத்தி’ படத்தின் இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டெவில்’. இந்த படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்கிறார்.

இந்த படத்தை மாருதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. மேலும், இந்தப் படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ். இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் மூலம் இயக்குந்ர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்த படம் அடுத்த மாதம் 2ஆம் தேதி திரைக்குவரவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய மிஷ்கின், “சவரக்கத்தி படத்தில் என் அம்மாவின் கதாபாத்திரத்தை தான் எழுதியிருந்தேன்.

அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது பூர்ணா. என் வாழ்க்கையில் பூர்ணா மிக முக்கியமான பெண். அடுத்த ஜென்மத்தில் அவர்தான் என்னுடைய அம்மாவாக இருக்க வேண்டும் என நினைத்தது உண்டு. அவர் வயிற்றில் நான் குழந்தையாகப் பிறக்க விரும்புகிறேன்.

என்னையும் அவரையும் குறித்து சிலர் தவறாக பேசுவார்கள். அவர் எனக்கு தாய் போன்றவர். என் குழந்தையை விட அவர் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். அவர் ஒரு நல்ல நடிகை, சாகும்வரை அவர் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்” என பாராட்டி பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஹெச்.வினோத் – கமல் கூட்டணி கைவிடப்பட்டதா?.. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here