தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நந்தமுரி கல்யாண் ராம் ‘டெவில் – பிரிடிஷ் சீக்ரெட் ஏஜென்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக, சம்யுக்தா நடித்திருக்கிறார்.
நவீன் மோடராம் இயக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர், இப்படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் தயாரித்து, இயக்கியுள்ளார். ‘டெவில்’ படம் பான் இந்தியா அளவில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
டெவில் திரைப்படம் பிரிட்டிஷ் உளவு முகவர் தொடர்பான கதையாக வருகிறது. ஸ்ரீகாந்த் விசா இப்படத்திற்குக் கதை அமைத்துள்ளார். ஒரு மர்மத்தைத் தீர்க்கும் முயற்சியில் ஏஜென்ட் டெவில் பல சவால்களை எதிர்கொள்வதுதான் கதையாக அமைந்திருக்கிறது.
டெவில் படத்தில் சம்யுக்தா, மாளவிகா நாயர், மார்க் பென்னிங்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டெவில் படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைத்துள்ளார். இவர், அனிமல் திரைப்படத்துக்கு இசையமைத்தவர். இப்படம் நவம்பர் 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், பின்னர் ரிலீஸ் தேதியை மாற்ரி டிசம்பர் 29ஆம் தேதிக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ‘டெவில்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை (டிச.12) வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.