நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயனுக்கு நன்றி.. உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!

0
118

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர். அதிலிருந்து மக்களை மீட்க, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன், அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மிக்ஜாம் புயல், கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள், இயக்கங்கள், தனிநபர்கள் என பலரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நம்மை சந்தித்த போது, நடிகர் சகோதரர் சிவகார்த்திகேயன், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும் நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம், இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here