‘பாடகி சித்ராவுக்கு எனது முழு ஆதரவை தெரிவிக்கிறேன்’ – நடிகை குஷ்பூ ட்வீட்..!

0
168

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது. அன்றைய தினம் அனைவரும் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை தினத்தன்று விளக்கேற்றி ராம மந்திரத்தை பாடுமாறு, பின்னணி பாடகி சித்ரா வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில் பாடகி சித்ரா கூறுகையில், “ராமர் கோவில் திறப்பு தினத்தன்று மதியம் 12:20 மணிக்கு அனைவரும் ராம மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

மாலை நேரத்தில் திருக்கார்த்திகைக்கு தீபம் வைக்கிற மாதிரி வீட்டோட எல்லா இடத்திலயும் தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் பாடகி சித்ராவுக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாடகி சித்ராவுக்கு நடிகை குஷ்பூ ஆதரவு குரல் எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சகிப்பின்மை உச்சத்தில் உள்ளது.

அவர்களால் ஒருவரின் நம்பிக்கைகளை மதிக்க முடியாது மற்றும் அதை ஏற்றுக்கொள்ளவும் தைரியம் கிடையாது. இது எனது வழி அவர்களுக்கு அனுமதி இல்லை. பாடகி சித்ரா அவர்களுக்கு எனது முழு ஆதரவை தெரிவிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்’ – இயக்குநர் அமீர் கோரிக்கை..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here