பா.ரஞ்சித்தை நேரில் சந்தித்த நடிகர் விக்ரம்.. என்ன காரணம்!

0
90

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் நிலையில் பா.ரஞ்சித்தை, விக்ரம் திடீரென சந்தித்துள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் கதைக்களம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎப் குறித்து அமைந்துள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ‘தங்கலான்’ திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மேலும், விக்ரமின் உடல் தோற்றம், நிறம் என வித்தியாசமாகக் காணப்படும் இவரது அசுர நடிப்பைக் காண்பதற்கான ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்தை நேரில் சென்று பார்த்துள்ளார்.

இதனையறிந்த ரசிகர்கள் என்ன காரணம் என எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித்திற்குத் தனது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக விக்ரம் நேரில் சென்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை ‘தங்கலான்’ படக்குழு இணையத்தில் பகிர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here