பிரபல தென் கொரிய நடிகர் காரில் மர்மமான முறையில் உயிரிழப்பு..! போலீஸ் தீவிர விசாரணை..!

0
130

Parasite actor Lee Sun Kyun death: தென் கொரியாவில் 2019ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் ‘பாராசைட்’. இந்த இப்படத்தில் நடித்து பிரபலமான லீ சன் கியூன் (48) மர்மமான முறையில் காரில் இறந்து கிடந்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், அவர் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்து அவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவல் துறையினர் விசாரணையும் நடத்தியிருக்கின்றனர்.

இந்த நிலையில், லீ சன் கியூன் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக இது தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படமாக ‘பாராசைட்’ இடம்பெற்றது. மேலும், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, படத்தொகுப்பு, தயாரிப்பு, வடிவமைப்பு போன்ற பிரிவுகளின் கீழ் விருதுகளைப் பெற்றது.

இதையும் படிங்க: ‘Thalaivar 171’ படத்தில் SK நடிப்பது உறுதியா?.. – அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here