பெரியாரை சீண்டிய சந்தானம்..? நெட்டிசன்கள் விமர்சனம்.. என்ன காரணம்?..

0
144

‘டிக்கிலோனா’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் கார்த்திக் யோகி. இவரது இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.

இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்பட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.

மேலும், இந்தப் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், நடிகர் சந்தானம் தனது ‘X’ வலைத்தளத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் இடம்பெற்றுள்ள ‘சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ, நா அந்த ராமாமி இல்ல’ என்ற வசனத்தை சந்தானம் பேசி சாமிக்கு பூஜை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ வெளியான சில மணிநேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கிளம்பியது. சந்தானம், பெரியாரை விமர்சித்து தான் இந்த வீடியோவை பதிவிட்டிருப்பதாக கருத்து தெரிவித்தனர்.

இதனால் அந்த வீடியோவை சந்தானம் தனது வலைத்தளப்பக்கத்தில் இருந்து நீக்கினார். இருந்தபோதிலும், இது குறித்து நெட்டிசகள் சமூகவலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: யோகி பாபு நடிக்கும் ‘தூக்குதுரை’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here