‘பைட் கிளப்’ படத்தின் புதிய அப்டேட்.. ‘ஜி ஸ்குவாட்’ வெளியிட்ட போஸ்டர்..!

0
76

‘உறியடி’ விஜய்குமார் நாயகனாக நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் ‘பைட் கிளப்’. இந்த படத்தை அப்பாஸ் ஏ.ரஹ்மத் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தில் கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

‘பைட் கிளப்’ படத்தை ரீல்ஸ் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இந்த படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து ‘பைட் கிளப்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘யாரும் காணாத’ பாடலின் வீடியோ வெளியாகியது. அப்பாடல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘பைட் கிளப்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘இராவணமவன்’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல ரீச் கிடைத்துள்ளது.

இப்படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், தற்போது இப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ‘பைட் கிளப்’ படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் மூலம் பகிர்ந்து அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here