‘போட்’ கதையை கேட்டு மிரண்டு போன பாலிவுட் நடிகர்.. ஹிந்தி ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா..!

0
100

தமிழ் சினிமாவில் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘அறை எண் 305-ல் கடவுள்’, ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சிம்புதேவன்.

கடைசியாக 2015ஆம் ஆண்டு விஜய்யை வைத்து ‘புலி’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து ‘கசட தபற’, ‘விக்டிம்’ போன்ற ஆந்தாலஜி படங்களை இயக்கினார்.

இதையடுத்து சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு சிம்பு தேவன் யோகிபாபுவை வைத்து ‘போட்'(BOAT) என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படம் ஒரு பீரியாடிக் படம் எனவும் இந்த படத்தின் கதை கடல் சார்ந்த பயணமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அஃதாவது, ‘போட்’ படத்தின் ஹிந்தி ரைட்ஸ் மட்டும் 2 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ‘போட்’ திரைப்படத்தின் கதையை கேட்ட அமீர் கான் வியப்படைந்ததாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு இருக்க இந்த படத்தின் டீசர் நாளை (டிச.16) துபாயில் மிக பிரம்மாண்டமாக வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், இந்த படத்தின் ஹிந்தி வெர்ஷன் டீசரை அமீர் கான் ரிலீஸ் செய்யப்போவதாக ஆச்சரியாமான தகவலும் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here