மகிழ் திருமேனிக்கு அழுத்தம் கொடுக்கும் அஜித்..! சூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன தெரியுமா?..

0
48

‘VidaaMuyarchi’ : அஜர்பைஜான் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படம் விருவிருப்பாக உருவாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இயக்குநர் மகிழ் திருமேனிக்கு அஜித் சில கண்டிஷன்கள் போட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மங்காத்தா படத்துக்கு பின்னர் அஜித்துடன் அர்ஜுன் மீண்டும் இணைந்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தற்போது குளிர்காலம் என்பதால் படக்குழுவினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதில், நடிகர் அஜித்தும் சிரமத்திற்கு ஆளாவதால் படப்பிடிப்பை பகல் நேரத்திலேயே எடுக்க வேண்டும் என இயக்குநரிடம் அஜித் கேட்டுக்கொண்டார்.

இந்த படப்பிடிப்புகள் 70 நாள்கள் தொடரும் எனவும் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்துடன் பேக்கப் செய்யப்பட்டு மீண்டும் சென்னையில் படப்பிடிப்புகள் தொடரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ‘தளபதி 68’ படத்தில் இணையும் பிரபல நடிகர்கள் யார் தெரியுமா?.. புதிய அப்டேட் விரைவில்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here