‘மலைக்கோட்டை வாலிபன்’ நாளை ரிலீஸ் – படக்குழுவிற்கு யோகி பாபு வாழ்த்து..!

0
141

மலையாளத்தில் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் மலைக்கோட்டை வாலிபன்.

இந்த படம் நாளை (ஜன.25) வெளியாக உள்ளது. இந்த படம் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் சேர்த்து பான் இந்திய படமாக வெளியாகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை மலைக்கோட்டை வாலிபன் படம் வெளியாகவுள்ள நிலையில் படம் வெற்றி பெற நடிகர் யோகி பாபு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதன்படி, மலைக்கோட்டை வாலிபன் பட போஸ்டர் அருகில் மோகன்லால் நிற்பது போன்ற புகைப்படத்தை அவர் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து, “மலைக்கோட்டை வாலிபன் ஜனவரி 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

ஆல் தி பெஸ்ட் மோகன்லால் சார். வாழ்த்துக்கள் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இந்த அற்புதமான திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள். மலைக்கோட்டை வாலிபன் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here