மிரட்டலான அப்டேட்டை வெளியிட்ட ‘ரத்னம்’ படக்குழு..!

0
82

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் ‘ரத்னம்’. தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். இது விஷாலின் 34ஆவது படமாகும். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விவேகா பாடல்களை எழுதுகிறார். இந்த நிலையில் ‘ரத்னம்’ படத்தின் முதல் லிரிக்கல் பாடல் புத்தாண்டு தினத்தன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு சண்டைக்காட்சியை 5 நிமிடங்கள் சிங்கிள் ஷாட்டில் (Single Shot) படமாக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு விடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் காட்சியமைப்பு குறித்து நடிகர் விஷாலிடம் பேசுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here