மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ‘பத்ம விபூஷன்’ விருது..

0
98

இந்திய சினிமாவின் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. இவர், 160க்கும் மேற்பட்ட படங்களில் வெற்றிகரமாக நடித்துள்ளார். சிரஞ்சீவி பல விருதுகள் மற்றும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து நடிகர் சிரஞ்சீவி விரைவில் சிறப்பு விருதை பெறுவார் என சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது.

அதன்படி கொரோனா போன்ற சவாலான காலங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்திருக்கிறார். ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கினார். இந்த நிலையில், சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட உள்ளது.

இது குறித்து, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சிரஞ்சீவி இதற்கு முன்பு 2006 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது பெற்றார்.

கடைசியாக நடிகர் சிரஞ்சீவி ‘வால்டேர் வீரய்யா’ என்ற படத்தில் நடித்தார். தற்போது தனது 156ஆவது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு ‘விஸ்வம்பர’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘Ayalaan Making Video’: ‘உங்களது கடினமான உழைப்பிற்கு வாழ்த்துகள்’ – ரசிகர்கள் கமெண்ட்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here