மெகா ஹிட்டான ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’.. இயக்குநருக்கு விலையுயர்ந்த பரிசு வழங்கிய சதீஷ்!

0
98

‘Conjuring Kannappan’: அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து டிசம்பர் 8ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’. இந்த திரைப்படத்தில் சதீஷ் உடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், ரெஜினா, நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் இந்த திரைபடத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டைமெண்ட் தயாரித்துள்ளது, இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்திற்கு ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

கேம் டிசைனரான சதீஷ், சூனியம் வைக்கப்பட்ட ஒரு ரெக்கையை தொட்டதால் பேய் பங்களாவிற்குள் மாட்டிக்கொள்கிறார். அந்த கனவில் உயிர் பிரிந்தால் நிஜ உலகிலும் உயிர் பிரிந்து விடும் என்ற நிலை ஏற்படுகிறது.

ஹீரோ மட்டுமன்றி, அவரது குடும்பமே அந்த கனவிற்குள் சிக்கிக்கொள்கின்றனர். பேயின் பிடியில் இருந்து அவர்கள் தப்பினார்களா? என்பது தான் கதை. இதனை காமெடியுடன் சேர்த்து கூறியுள்ளனர்.

‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டான நிலையில் தற்போது படத்தின் ஹீரோ சதீஸ், இயக்குநர் செல்வின் ராஜ் சேவியருக்கு விலை உயர்ந்த பரிசு வழங்கியுள்ளார். மேலும், இன்று இயக்குநர் பிறந்த நாள் என்பதால் அவருக்கு Emporio Armani வாட்சை பரிசாக வழங்கியிருக்கிறார்.

இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்துள்ளது. முதல் நாளே இப்படம் ரூ.1 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தொடர்ந்து மக்களின் ஆதரவு அதிகரிக்கவே, தியேட்டர்களில் ஸ்கிரீன்களும் அதிகரிக்கத் தொடங்கியது.

இதையும் படிங்க: மகிழ் திருமேனிக்கு அழுத்தம் கொடுக்கும் அஜித்..! சூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன தெரியுமா?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here