யோகி பாபு நடிக்கும் ‘தூக்குதுரை’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

0
160

‘ட்ரிப்’ படத்தின் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தூக்குதுரை’. இந்த படத்தில் யோகிபாபு கதாநாயகனாகவும், நடிகை இனியா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் மகேஷ் சுப்ரமணியம், பால சரவணன், மொட்டை ராஜேந்திரன், செண்ட் ராயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு கே.எஸ்.மனோஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை ஓபன் கேட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், ‘தூக்குதுரை’ படத்தின் டிரைலர் நாளை (ஜன.17) வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

‘தூக்குதுரை’ படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. முழுக்க முழுக்க காமெடியை பின்னணியாகக்கொண்டு உருவாகியுள்ள இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ‘குண்டூர் காரம்’ படத்தில் பீடி புகைத்த விவகாரம்.. மகேஷ் பாபுவின் விளக்கம் என்ன?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here