ரசிகர்களுக்கு ‘Thug’ கொடுத்த ‘Thug Life’ திரைப்படம்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

0
108

‘Thug Life’ – சினிமா, அரசியல் என இரண்டையும் ஒரே நேரத்தில் கையாண்டு வந்த உலக நாயகன் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என் ட்ரி கொடுத்தார். விக்ரம் திரைப்படம் பெரிய அளவில் வெற்றிபெற்றது.

அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி இந்தியன் 2, ஹெச்.வினோத் இயக்கும் படம், மணிரத்னம் இயக்கும் படம் ஆகியற்றில் நடிக்கவுள்ளார். கமலும், மணிரத்னத்தும் இணைந்து ஏற்கனவே நாயகன் படத்தை கொடுத்து பெரும் அடையாளமாக இருக்கிறார்கள்.

தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த சூழலில் படத்தின் பூஜையும், டீசர் ஷூட்டிங்கும் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதில் கமல், மணிரத்னம் மற்றும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர். அதனையடுத்து கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி மாலை 5 மணிக்கு படத்தின் டைட்டில் இன்ட்ரோ வீடியோ வெளியிடப்பட்டது.

அதன்படி படத்தின் இன்ட்ரோ வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. அதில் வெட்டவெளியில் உடல் முழுவதும் துணியை உடலில் சுற்றிக்கொண்டு நிற்கும் கமல் ஹாசன், ‘என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கன், காயல்பட்டினக்காரன்’ என கூறுவது போன்றும் அவரை எதிரிகள் தாக்க வரும்போது அதற்கு பதில் தாக்குதல் நடத்தும்படியும் காட்சிகள் இருந்தன. படத்திற்கு ‘தக் லைஃப்’ (Thug Life) என பெயர் வைக்கப்பட்டது.

இந்த படத்தில் வரும் காட்சிகள் வைத்து இது ஒரு பீரியாடிக் படமாக இருக்கும் என்ற தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில், தற்போது ஒரு ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ‘Thug Life’ திரைப்படம் ஒரு பீரியாடிக் படம் கிடையாது என்றும் இது நடப்பு காலத்தில் நடக்கும் ஒரு கதையாக தான் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரசிகர்கள் அதிர்சியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here