ரஜினி பிறந்தநாளன்று வெளியாகும் ‘ஸ்டார்’ பாடல்.. படக்குழு அறிவிப்பு!

0
122

Star Movie Update: ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கி பிரபலமான இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் திரைப்படம் ‘ஸ்டார்’. ‘டாடா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஸ்டார் படத்தின் கவின் நடிக்கிறார்.

பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரிப்பில் இப்படம் வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.

‘ஸ்டார்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், ‘ஸ்டார்’ படத்தின் முதல் பாடல் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இதனைச் சிறப்பு காணொளி மூலம் படக்குழு அறிவித்துள்ளது. இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here