‘லவ்வர்’ படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!

0
50

‘Lover’ : ‘குட் நைட்’ திரைப்படத்தின் ரசிகர்களை ஈர்த்த நடிகர் மணிகண்டன் தற்போது ‘லவ்வர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீகவுரி பிரியா நடிக்கிறார். மேலும், கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படமானது கல்லூரியில் இருந்து ஆறுவருடங்களாகப் பெண் ஒருவரை காதலித்து வரும் இளைஞருக்கும், அப்பெண்ணிற்கும் இடையில் இருக்கும் உறவுச்சிக்கலை விவரித்துப் பேசுகிறது.

இந்த நிலையில், படக்குழு ‘லவ்வர்’ ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘லவ்வர்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த படப்பிடிப்பின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி திரைக்கு வரும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here