லீக் ஆன ‘தளபதி 68’ படத்தின் டைட்டில்! படக்குழு அதிர்ச்சி..!

0
113

‘Thalapathi 68’ – நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் லீக் ஆகியுள்ளதால் படக்குழு பெரும் அதிர்ச்சியில் உள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 68ஆவது படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் ஹைதராபாத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தைப் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம் என நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறார்கள்.

வெங்கட் பிரபு, சிம்பு வைத்து எடுத்த மாநாடு திரைப்படம் ஒரு டைம் ட்ராவலை மையாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில் இந்த படமும் டைம் ட்ராவலை வைத்து தான் கதை அமையவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அவர்களுக்கு மேலும் ஹைப்பை ஏற்படுத்துவதற்காக இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு தகவலை வெளியிட்டார். அதில், ‘இதுவரை பார்த்திடாத விஜய்யை இந்த படத்தில் பார்க்கலாம்’ எனக் கூறியிருக்கிறார். மேலும், இந்த படத்தில் தந்தை – மகன் என விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முக்கிய காட்சிக்கு ரூ.6 கோடி செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 10 நிமிடங்கள் மட்டுமே வரும் இந்த காட்சியில் விண்டேஜ் விஜய் வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் லீக் ஆகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புத்தாண்டு தினத்தன்று படத்தின் டைட்டிலை வெளியிடலாம் என படக்குழு தயாராகி வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் லீக் ஆகியுள்ளது. ‘தளபதி 68’ படத்திற்கு ‘பாஸ்’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த டைட்டில் உறுதி என கூறப்படவில்லை, இத்துடன் சேர்த்து மேலும் இரண்டு, மூன்று டைட்டில்கள் வைத்துள்ளனராம். அவற்றில் எது உறுதியாகிறதோ அந்த டைட்டிலை வரும் புத்தாண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here