Lokesh Kanagaraj’s Facebook page hacked?: தமிழ் திரைத்துறையின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர், ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கி விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம் மெகா ஹிட்டானது.
இதைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171ஆவது படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது. மேலும், இப்படத்தில் ரஜினிகாந்த் நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘ஜி ஸ்குவாட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நிறுவனத்தின் முதல் படைப்பாக ‘பைட் கிளப்’ என்ற திரைப்படத்தை வெளியிடுகிறார்.
இப்படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் பேஸ்புக் தளம் ஹேக் செய்யப்பட்டதாகச் சர்ச்சை கிளம்பியது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, லோகேஷ் கனகராஜ் தனது ‘X’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “நான் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே இருக்கிறேன். வேரு எந்த சமூக வலைத்தளங்களில் இல்லை. வேறு தளங்களில் என் பெயரில் கணக்குகள் இருந்தால் அதைப் பொருட்படுத்த வேண்டாம். அதில், என்னை பின் தொடர்வதைக் கைவிடுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.