‘வந்தே மாதரம்’ பாடலை பாடிய வெளிநாட்டு ரசிகை.. ரசித்து வீடியோ எடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்…!

0
121

தமிழ் திரையுலகில் ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகனாக வலம் வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் தமிழில் ‘லால் சலாம்’, ‘தக் லைப்’ போன்ற படங்களுக்கும் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் புதிய படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் வெளிநாட்டு ரசிகை ஒருவர், ஏ.ஆர்.ரஹ்மானிடம் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் காரின் உள்ளே அமர்ந்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானிடம் வெளிநாட்டு ரசிகை ஒருவர், ‘நான் உங்களின் தீவிர ரசிகை, உங்களுக்காக ஒரு பாட்டு பாடலாமா..?’ எனக் கேட்கிறார்.

அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ‘சரி’ என்றவுடன், அந்த ரசிகை ‘வந்தே மாதரம்’ பாடலை பாட தொடங்குகிறார். உடனே ஏ.ஆர்.ரஹ்மான் அதனை தனது செல்போனில் வீடியோ எடுக்கிறார்.

தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ‘Mission Chapter 1’ படத்திற்கு நல்ல வரவேற்பு.. ஈஷா ஆதியோகியை தரிசித்த அருண் விஜய்.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here