வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அஜித்.. என்ன நடந்தது..?

0
141

Vadivasal issue: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த வாடிவாசல் படத்தில் சூர்யாவிற்குப் பதிலாக அஜித் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது. இது குறித்த தெளிவான விளக்கத்தைக் காண்போம்.

சமீப காலமாக இயக்குநர் அமீருக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் இடையிலான பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் தாக்கத்தால் நடிகர் சூர்யா நடிக்கவிருந்த வாடிவாசல் படத்தில் அவருக்குப் பதிலாக அஜித் நடிப்பார் என்ற தகவல் பரவியது. இந்நிலையில் இது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் தரப்பிலிருந்து ஒரு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

வெற்றிமாறன் மற்றும் சூரியா கூட்டணி வாடிவாசல் படத்தில் இணையப் போவது உறுதி எனவும் வாடிவாசல் படத்தில் எந்த ஒரு நடிகர் மாற்றமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. வாடிவாசல் படத்திற்கான கதை முழுக்க முழுக்க சூர்யாவிற்காகவே எழுதப்பட்டதாகவும், வாடிவாசல் படத்தில் ஏறுதழுவுதலுக்காகப் பல பயிற்சிகளை சூர்யா மேற்கொண்டு இருப்பதாக் கட்டாயம் சூர்யா தான் நடிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுபோக வாடிவாசல் படம் எப்போது என கேட்டு வரும் சூர்யாவின் ரசிகர்களுக்கு அருமையான தகவலையும் வெளியிட்டுள்ளனர். தற்போது வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் மும்மரமாக இருக்கிறார்.

அதனால், விடுதலை 2 படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். அந்த வகையில் வாடிவாசல் படத்தில் கண்டிப்பாக அஜித் இல்லை, சூர்யா தான் என்ற செய்தி அன்பான ரசிகர்களுக்கு ஆனந்தமான செய்தியாக இருக்கும் என்பது சந்தேகம் இல்லை.

நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தின் படபிடிப்பை முடித்த பிறகு, சுதா கோங்குரா இயக்கத்தில் சூர்யா 43 படத்திற்காக இணைக்கிறார். அடுத்த அடுத்த பல படங்களை லைன் அப்பில் வைத்திருக்கும் சூர்யா விடுதலை 2 ரிலீசுக்கு பிறகு வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here