‘வாழ்ந்தா கேப்டன மாதிரி வாழணும்’ – நடிகர் சூரி!

0
91

கேப்டன் விஜயகாந்த உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிச.28ஆம் காலமானார். அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அவரது இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள முடியாத நடிகர்கள் கடந்த சில நாட்களாக விஜயகாந்த்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இன்று நடிகர் சூரி விஜயகாந்த்தின் வீட்டிற்குச் சென்று பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது இரண்டு மகன்களைச் சந்திதத்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அங்கிருந்த விஜயகாந்த்தின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சூரி, “சினிமாவில் எப்படி மக்களுக்கு நல்லது செய்தாரோ அதேபோல, நிஜத்திலும் மக்களுக்கு நல்லது செய்தவர். வாழ்ந்தா இவர மாதிரி வாழ வேண்டும் என அனைவரும் நினைக்கும்படி பதிவு செய்துவிட்டு சென்றுவிட்டார். காலம் முழுவதும் கேப்டன் மக்கள் மனதில் வாழ்துகொண்டே இருப்பார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘புளூ ஸ்டார்’, ‘தங்கலான்’ படங்கள் ரிலீஸ்.. பா.ரஞ்சித்திடம் கேள்வி எழுப்பிய ரசிகர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here